தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

இயக்குநருக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர்! - கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குநர் தேசிங் பெரியசாமி

'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' பட இயக்குநர் தேசிங் பெரியசாமிக்கு அப்படத்தின் தயாரிப்பாளர் கார் ஒன்றைப் பரிசளித்துள்ளார்.

ford Eco sport
ford Eco sport

By

Published : Mar 5, 2021, 8:44 PM IST

நடிகர் துல்கர் சல்மான், ரித்து வர்மா நடிப்பில் வெளியான திரைப்படம் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'. இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கியுள்ள இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படம் துல்கர் சல்மானின் 25ஆவது படமாகும்.

இதில் துல்கர், ரித்து வர்மாவுடன் தொகுப்பாளர் ரக்க்ஷன், நிரஞ்சனி அகத்தியன், இயக்குநர் கெளதம் மேனன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியான இப்படம் கரோனா பொதுமுடக்கம் அறிவிப்பு முன்னரே ரசிகர்களிடையே இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்று சூப்பர் ஹிட் ஆனது.

அதேபோல் இப்படத்தை பார்த்த ரஜினி, தேசிங் பெரியசாமியை போனில் வாழ்த்தியதாகச் செய்திகள் வெளியாகின.

இப்படத்தில், ரித்து வர்மாவுக்குத் தோழியாக வந்த நிரஞ்சனியை தேசிங் பெரியசாமி சமீபத்தில் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படம் வெளியாகி ஓராண்டை நிறைவு செய்தையடுத்து இப்படத்தின் தயாரிப்பாளர் ஆண்டோ ஜோசப் தேசிங் பெரியசாமிக்கு கார் ஒன்றைப் பரிசளித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details