முத்துகுமரன் இயக்கத்தில் நடிகர் விமல்- வரலட்சுமி நடித்துள்ள படம் 'கன்னிராசி'. விமல் - வரலட்சுமியுடன் பாண்டியராஜன், யோகிபாபு, ரோபோ சங்கர், ஷகிலா உள்பட பலர் நடித்துள்ளனர். கிங் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு செல்வகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்.
கன்னிராசிக்கு யூ சான்றிதழ் - விமல்
விமல் - வரலட்சுமி நடித்த 'கன்னிராசி' திரைப்படத்திற்கு தணிக்கைகுழு 'யூ' சான்றிதழ் அளித்துள்ளனர்.

1
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இன்று இந்த படம் தணிக்கைக்கு சென்றது. தணிக்கை குழு அதிகாரிகள் இப்படத்திற்கு 'யூ' சான்றிதழ் அளித்தனா்.
தணிக்கை சான்றிதழ் பெற்றதை அடுத்து விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த படம் கோடை விடுமுறைக்கு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.