சமீப காலமாகச் சுயாதீன இசைக்கான (Independent Music) வரவேற்பு அதிகமாகியுள்ளது. அந்த வகையில் தற்போது ரியோ ராஜ், பவித்ரா ஆகியோர் இணைந்து நடித்துள்ள சுயாதீன இசை பாடல் 'கண்ணம்மா என்னம்மா'.
இதில் ரக்ஷன், சுனிதா, தாமு, பாலா, சாம் விஷால், ஶ்ரீதர்சேனா, மானஷி, ஈரோடு மகேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இப்பாடலின் டீஸர், லிரிக்கல் வீடியோ ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றநிலையில், நேற்று (அக்.15) வீடியோவுடன் பாடல் வெளியானது. சாம் விஷால் பாடலை பாடியுள்ளார்.
இதுகுறித்து இயக்குநர் பிரிட்டோ கூறுகையில், "எனது படத்தின் வேலைகள் தாமதமாகி வந்த நிலையில் இப்பாடலில் பணிபுரிய முடிவெடுத்தேன். ரீகன் ஆல்பர்ட் இருவரின் இசை இப்பாடலுக்கு வலு சேர்த்துள்ளது.