தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'கன்னக் குழியழகே' - சுயாதீனப் பாடலை வெளியிட்ட இயக்குநர் அருண்ராஜா காமராஜ் - கன்னக் குழியழகே பாடலை வெளியிட்ட இயக்குநர் அருண்ராஜா காமராஜ்

இயக்குநர் அருண்ராஜா காமராஜ் தன்னுடைய ஏ.ஆர்.கே நிறுவனம் சார்பில் இசை ஆல்பங்களையும், தனிப்பாடல்களையும் வெளியிடத் திட்டமிட்டுள்ளார். இதையடுத்து 'கன்னக் குழியழகை' என்னும் தனிப்பாடலை வெளியிட்டுள்ளார்.

Kannakkuzhi Azhage by A R K entertainment company in twitter
Kannakkuzhi Azhage by A R K entertainment company in twitter

By

Published : May 29, 2020, 3:12 PM IST

'கனா' திரைப்படத்தின் இயக்குநர் அருண்ராஜா காமராஜ், ஏ.ஆர்.கே என்ற நிறுவனத்தைத் தொடங்கி, பிலீவ் ஆர்டிஸ்ட் சர்வீசஸ் அண்ட் டெவலப்மெண்ட் என்ற நிறுவனத்துடன் இணைந்து, இசை ஆல்பங்களையும், தனிப்பாடல்களையும் தொடர்ந்து வெளியிடத் திட்டமிட்டுள்ளார். இதனையடுத்து, இந்நிறுவனம் சார்பாக 'கன்னக் குழியழகே' என்ற தனிப்பாடல், முதல் முறையாக வெளியிடப்பட்டிருக்கிறது.

கணேசன் சேகர் இசையமைப்பில் நாட்டுப்புற மெல்லிசைப் பாடலாக உருவாக்கப்பட்டிருக்கும். இதன் டீசர் சமீபத்தில் வெளியானது. தற்போது விஜய் ஜேசுதாஸின் தேனிசைக் குரலுடன் 'கன்னக் குழியழகே' லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.

இதுகுறித்து அருண்ராஜா காமராஜ் கூறுகையில், 'இசைத் துறையில் திறமையானவர்களைக் கொண்டு தனி இசைப்பாடல்களை உருவாக்குவதையே பிரதான நோக்கமாகக் கொண்ட ஏ.ஆர்.கே. நிறுவனத்தின் முதல் முயற்சியாக கணேசன் சேகர் இசையமைப்பில் 'கன்னக் குழியழகே' பாடல் வெளியாகியிருக்கிறது. முதல் பார்வையிலேயே ஒரு பெண் மீது காதல் வசப்படுவது குறித்து பாடல் ஒன்றை ஆர்வம் மிக்க பாடலாசிரியர் ஒருவர் எழுத வேண்டியிருக்கிறது. ஆனால் அவருக்கோ இதில் அனுபவமில்லை என்பதால் அந்தச் சூழலே முற்றிலும் முரண்பாடாக இருக்கிறது. அந்த சமயத்தில் அடுத்த பாடல் பதிவுக்காக பெண் ஒருத்தி வருகிறாள். கவர்ந்திழுக்கும் அவளது எழிலான தோற்றமும், தேவதை போல் அவள் புன்னகைப்பதும் வற்றாத வார்த்தை ஊற்றாகப் பெருக்கெடுக்க, அழகான பாடல் பிறக்கிறது. பாடலின் மந்திர வரிகளைக் கேட்ட அந்தப் பெண், இறுதியில் புன்னகைத்தவாறே பாடலாசிரியருக்கு வாழ்த்து தெரிவிக்கிறாள். எழுச்சியூட்டும் ஆன்மாக்களின் புதிய பயணம் இங்கே தொடங்குகிறது' என்று தெரிவித்தார்.

ஏ.ஆர்.கே நிறுவனம்

பாடலை உருவாக்கியிருப்பதுடன் பாடலுக்கான விஷுவல்ஸையும் அருண்ராஜா காமராஜே இயக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க...'எனக்கு அந்தக் கனவு மீண்டும் வேண்டும்' - கோவிந்த் வசந்தா

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details