ஜெயம் ரவி நடிப்பில் 2019ஆம் வெளியான 'கோமாளி' திரைப்படத்தில் நடித்தவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவரான இவர், பெங்களூரு அகரா ஏரி அருகே உள்ள பூங்கா ஒன்றில், தனது நண்பர்களுடன் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார்.
அப்போது பூங்காவில் நடைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த பெண்கள், சம்யுக்தாவின் ஆடை குறித்து விமர்சனம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சம்யுக்தாவின் இரண்டு தோழிகளும் அந்த பெண்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், சம்யுக்தாவும் அவரது தோழிகளும் அங்கிருந்தவர்களால் தாக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதுகுறித்து சம்யுக்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைவ் வீடியோவையும் வெளியிட்டார்.