கர்நாடகா மாநிலம், கோலார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சைத்ரா கொட்டூர். இவர் கன்னட மொழிப் படங்கள், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானார். இவரும் நாகர்ஜூனா என்பவரும், காதலித்து வந்த நிலையில், திருமணத்திற்கு நாகர்ஜூனாவின் பெற்றோர் சம்மதம் தெரிவிக்கவில்லை.
இதனையடுத்து இவர்கள் இருவரும் கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் திருமணம் முடிந்த நாளன்றே நாகர்ஜூனா காவல் நிலையத்தில், தனக்கு நடந்த திருமணத்தில் விருப்பமில்லை என்றும், வலுக்கட்டாயமாகத் தான் சைத்ராவின் கழுத்தில் தாலி கட்டியதாகப் புகார் அளித்தார்.
அப்புகாரின் பேரில் சைத்ராவை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர், நாகர்ஜூனைவை காதலிப்பதாகவும் அவருடன் தான் செல்வேன் என்று உறுதியாகக் தெரிவித்துள்ளார். ஆனால் நாகர்ஜூனா, தன்னுடைய குடும்பம் தான் முக்கியம் என்று கூறியுள்ளார். இதனையடுத்து சைத்ரா தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.