பாடலாசிரியர் சினேகன்- கன்னிகா ரவி திருமணம் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் தலைமையில் சமீபத்தில் நடைபெற்றது.
இத்திருமணத்தில் இயக்குநர் இமயம் பாரதிராஜா உள்பட ஒரு சில திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில் திருமணத்திற்குப் பிறகு நடிகை கன்னிகா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "என் முதல் காதல் திருமணத்துடன் தொடர்கிறது.
முதல் புகைப்படம் 2014ஆம் ஆண்டு எடுத்தது. வாழ்த்திய எல்லோருக்கும் நன்றிங்க. கரோனா சூழ்நிலையால் யாரையும் கூப்பிட முடியல கோவம் வேண்டாம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:கமல் முன்னிலையில் சினேகன் திருமணம் - புகைப்படங்கள்