பாலிவுட் பாடகி கனிகா கபூர், கோவிட்-19 தொற்றுள்ள நோயாளிகளின் சிகிச்சைக்காக, தனது பிளாஸ்மாவைத் தானமாகக் கொடுக்க முடிவு செய்து, லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலைக்கழகத்தை அணுகியுள்ளார்.
இதுகுறித்து அப்பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் துலிகா சந்திரா கூறியதாவது, 'கனிகா என்னைத் தொலைபேசியில் அழைத்து, மற்ற கோவிட்-19 நோயாளிகளுக்கு உதவ விரும்புவதாக தெரிவித்தார். அவரின் இந்த முடிவுக்கு துணைவேந்தர் சம்மதம் தெரிவித்தார்.
அதன்படி நேற்று அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அவரின் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பதால், பிளாஸ்மா தானத்திற்காக சில நாட்கள் காத்திருக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.
இதைக் கேட்ட ரசிகர்கள், கனிகா கபூரின் ஹீமோகுளோபின் அளவு உயரவில்லை என்றால் அவரது உதவி நிராகரிக்கப்படுமா? என்று சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பியுள்ளனர். கனிகா கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான், கரோனா சிகிச்சை முடிந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஆன்லைனில் வெளியாகும் சித்தார்த் திரைப்படம்!