தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அரை நூற்றாண்டாக சினிமாவில் பணியாற்றும் ஹேர் ஸ்டைலிஸ்டுக்கு 'தலைவி'யின் வாழ்த்து - கங்கனாவின் தலைவி பட லேட்டஸ்ட் போட்டோ

'தலைவி' படத்தில் கங்கனா ரணாவத்தின் லுக் டீம்கங்கனா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள நிலையில், அந்தப் படத்தில் ஹேர் ஸ்டைலிஸ்டாக பணியாற்றி வரும் மரியா ஷர்மா பல தலைமுறை நடிகைகளுக்கு சிகை அலங்காரம் செய்து சினிமாவில் அரை நூற்றாண்டை கடந்ததற்கு நடிகை கங்கனா தெரிவித்த வாழ்த்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Kangana shares pic of Thalaivi movie
Actress Kangana

By

Published : Jan 30, 2020, 8:52 PM IST

மும்பை: திரைத்துறையில் அரை நூற்றாண்டை கடந்த ஹேர் ஸ்டைலிஸ்ட் மரியா ஷர்மாவுக்கு டீம் கங்கனா ரணாவத் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் 'தலைவி' படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார் நடிகை கங்கனா. இதையடுத்து படத்துக்காக பழம்பெரும் நடிகைகள் போன்ற தோற்றத்துக்கு மாறியிருக்கும் அவர், பூக்கள் மற்றும் தங்க நிறத்திலான ஆபரணத்தால் அலங்கரிக்கப்பட்ட அவரது புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

அந்தப் படத்தில் கங்கனாவுடன் பழம்பெரும் ஹேர் ஸ்டைலிஸ்ட் மரியா ஷர்மா உடன் இருக்கிறார்.

இதில், 5 தசாப்தங்களாக இந்தியத் திரையுலகில் பணியாற்றி வரும் மரியா ஷர்மாவுக்கு வாழ்த்துகள். பழம்பெரும் நடிகைகளான ஹெலென், ஷர்மிளா தாகூர், ஹேமா மாலினி, மனிஷா கொய்ராலா என பல தலைமுறை ஹீரோயின்களுடன் பணியாற்றியிருக்கும் இவர், 'தலைவி' படத்தின் மூலம் 50 ஆண்டுகளை கடந்துள்ளார்.

மரியா ஜி-யுடன் இணைந்து வோ லம்ஹே, ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் மும்பை படங்களிலிருந்து கங்கனா ரணாவத் பயணித்து வருகிறார். தற்போது 'தலைவி' படத்துக்கு இறுதிகட்ட அலங்கார பணியில் ஈடுபடுகிறார் என்று குறிப்பிட்டுள்ளது.

தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் உருவாகி வரும் 'தலைவி' ஜுன் 26ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details