தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 17, 2020, 5:11 PM IST

ETV Bharat / sitara

விமானப் பெண் லுக்கில் கங்கனா - தேஜஸ் பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

கங்கனா ரணாவத் நடிக்கும் தேஜஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.

தேஜஸ் பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
தேஜஸ் பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

நடிகை கங்கனா ரணாவத், தற்போது தலைவி படத்தின் ஷூட்டிங்கில் நடித்து வருகிறார். மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரணாவத் நடிக்க, எம்ஜிஆர் கதாப்பாத்திரத்தில் அரவிந்த் சாமி நடித்து வருகிறார்.

இந்த நிலையில், 'தேஜஸ்' என்று பெயரிடப்பட்ட படத்தில் கங்கனா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சர்வேஷ் மேவரா இயக்கும் இப்படம், கடந்த 2016 ஆம் ஆண்டு பெண்களும், போர் விமானங்களை ஓட்டலாம் என்ற சிறப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டதை மையப்படுத்தி உருவாகி வரும் திரைப்படம் எனக் கூறப்படுகிறது.

தலைவி படத்தின் ஷூட்டிங், ஏப்ரல் மாதம் நிறைவுப் பெற்றதை அடுத்து, தேஜஸ் படத்தின் ஷூட்டிங் தொடங்கவுள்ள நிலையில், இன்று தேஜஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் விமானப் பெண் உடையணிந்த தோற்றத்தில் கம்பீரமாக கங்கனா ரணாவத் காட்சியளிக்கும் போஸ்டர் வெளியான சிறிது நேரத்தில் அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க:நடிகர் சங்கத் தேர்தல் - தேர்தல் வேலைகளைத் தொடர உயர் நீதிமன்றம் அனுமதி

ABOUT THE AUTHOR

...view details