தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

’தலைவி’ படப்பிடிப்பில் இணைந்த கங்கனா! - தலைவி திரைப்படம்

நடிகை கங்கனா ரனாவத் ’தலைவி’ படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தலைவி
தலைவி

By

Published : Oct 5, 2020, 1:26 PM IST

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகும் திரைப்படம் 'தலைவி'. இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கும் இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கிறார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகும் இதில் எம்.ஜி.ஆராக அரவிந்த்சாமியும், கலைஞர் கருணாநிதியாக பிரகாஷ் ராஜூம் நடிக்கின்றனர். இந்தத் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

இந்நிலையில், இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கரோனா ஊரடங்கு காரணமாக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பில் எடுக்கபட்ட புகைப்படங்களை நடிகை கங்கனா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், “இந்த புகைப்படங்கள் நேற்று (அக்.04) அதிகாலை படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்டது. எனக்கு மிகவும் பிடித்த இயக்குநர் ஏ.எல். விஜய், என்னிடம் காட்சி குறித்து விவரிக்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார். ’தலைவி’ திரைப்படம் அடுத்த வருடம் திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க:ஆறு மாததிற்கு பிறகு படப்பிடிப்பில் கலந்துகொண்ட சல்மான் கான்!

ABOUT THE AUTHOR

...view details