தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'பாதுகாப்பாக பாலியல் உறவு வைத்துக்கொள்ள ஊக்கப்படுத்துங்கள்' - கங்கணாவின் யோசனை - தலைவி திரைப்படம்

மும்பை: பாலியல் உறவை ஒதுக்கப்பட்ட விஷயமாகப் பார்க்காமல் பெற்றோர் தங்களது பிள்ளைகளை பாதுகாப்பாக உறவு கொள்ளுமாறு ஊக்கப்படுத்த வேண்டும் என்று நடிகை கங்கணா ரணாவத் கேட்டுக்கொண்டுள்ளார்.

நடிகை கங்கனா ரணவத்

By

Published : Sep 30, 2019, 9:09 AM IST

Updated : Sep 30, 2019, 12:36 PM IST

இது குறித்து கங்கணா பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது:

"ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பாலியல் உறவு முக்கியமானதாகத் திகழ்கிறது. பாலியல் உறவு வைத்துக்கொள்ள விரும்பினால் அந்த சிந்தனையிலிருந்து விலகியிருக்காமல் வைத்துக் கொள்ள வேண்டும்.

முன்னொரு காலத்தில் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டு, உணர்ச்சிகள் முழுவதையும் அவரிடமே கொட்ட வேண்டும் என்று நமக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. வரலாற்றில் பல்வேறு படையெடுப்புகளை சந்தித்துள்ளதால் இதுபோன்ற சிந்தனைகள் நம் மக்களிடையே தற்போது உள்ளது. மேலும், நமது வேதங்கள் இதனை அனுமதிப்பதில்லை.

பெற்றோர் தங்களது பிள்ளைகள் பாலியல் உறவில் ஈடுபடுவது தெரிந்தால் மகிழ்ச்சியடைய வேண்டும். அதே சமயம் பாதுகாப்பாக உறவு மேற்கொள்வது குறித்து ஊக்கப்படுத்த வேண்டும்.நான் பாலியல் உறவில் ஆக்ட்டிவாக இருப்பதை தெரிந்துகொண்ட எனது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்" என்று கூறியுள்ளார்.

பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாக வலம்வரும் கங்கணா ரணாவத், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் 'தலைவி' படத்தில் நடிக்கிறார்.

சினிமாவில் கவர்ச்சிகரமாகவும், போல்டான கதாபாத்திரங்களிலும் நடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் கங்கணா இது போன்ற கருத்துகளையும் கூறிவருகிறார்.

Last Updated : Sep 30, 2019, 12:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details