கரோனா தொற்று நாடுகளின் பொருளதாரத்தை வீழ்த்தும் பயோ வாராக இருக்கலாம் என்று கங்கனா ரனாவத் கூறியுள்ளார்.
உலகப்பெருந்தொற்று நோயான கரோனா தொற்றால் தற்போது உலகம் முழுவதும் அச்சத்தில் உள்ளது. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கையும் பாதிப்படைந்துள்ளது.

இதற்கிடையில், மணலியில் இருக்கும் கங்கனா ரனாவத் கரோனாவால் அறிவிக்கப்பட்டிருக்கும் தேசிய ஊரடங்கு உத்தரவு குறித்து கூறுகையில், கரோனா வைரஸ் நம் அனைவருக்கும் ஒரு எச்சரிக்கை. ஒரே தேசமாக இருந்து நமது ஒற்றுமையை பிரதிபலிக்க வேண்டிய நேரமிது. தேசிய ஊரடங்கு உத்தரவு நமக்கான நாட்கள் அல்ல. இந்த நாட்களில் நமது எண்ணங்களுக்கு ஏற்ப செயல்படக் கூடாது. பொருளாதாரத்தில் மேம்பட்டு இருக்கும் நாடுகள் மற்ற நாடுகளின் பொருளாதாரத்தை வீழ்த்த இந்த கரோனா தொற்றை ஒரு பயோ வாராக தொடுத்திருக்கலாம் என கருதுகிறேன்.
கரோனா காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த நாட்களில் பொருளாதர ரீதியாக இரண்டு ஆண்டுகள் பின்தங்கி இருப்போம். ஆனால் 21 நாட்களுக்கு மேலும் இந்த ஊரடங்கு உத்தரவு நீடித்தால் தேசத்திற்கு ஒரு பேரழிவாக இருக்கும். காரணம் நாம் வளர்ந்துவரும் நாடு என கூறியுள்ளார்.