தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'தலைவி' குழுவினருடன் கங்கனா தீபாவளி கொண்டாட்டம் - தீபாவளி கொண்டாட்டம்

தலைவி திரைப்படத்தில் நடித்துவரும் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் அமெரிக்காவில் படக்குழுவினருடன் தீபாவளியை கொண்டாடியுள்ளார்.

kangana-ranaut

By

Published : Oct 26, 2019, 8:50 AM IST

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமாக இருந்துவந்த ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இயக்குநர் ஏ.எல்.விஜய் 'தலைவி' திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

மதராசப்பட்டினம், தெய்வத் திருமகள், தேவி உள்ளிட்ட வெற்றிப்படங்களைத் தொடர்ந்து முதன்முறையாக ஏ.எல்.விஜய் வாழ்க்கை வரலாற்றுப்படத்தை இயக்குகிறார்.

நடிகை கங்கனா ரணாவத்

இந்தப்படத்தில் பாலிவுட் குயின் கங்கனா ரணாவத் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தலைவி தயாராகி வருகிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, திரைத்துறையில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்ததோடு, சிறுவயது முதலே பரத நாட்டியத்திலும் சிறந்து விளங்கியவர் என்பதால் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான தலைவியில் நடிப்பதற்காக, கங்கனா முறையாக பரத நாட்டியம் மற்றும் அவர் நடித்த பல்வேறு படங்களையும் கண்டு முறையாக பயிற்சி பெற்று வருகிறார்.

இதனிடையே புரொஸ்தெடிக் மேக்கப் உள்ளிட்ட பணிகளுக்காக அமெரிக்காவில் முகாமிட்டுள்ள படக்குழு, தீபாவளியை முன்னிட்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் தீபாவளிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட புகைப்படம் மற்றும் காணொளியை கங்கனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க...

‘கைதி’ திரைப்படம் எப்படி இருக்கு?

ABOUT THE AUTHOR

...view details