தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'நீங்கள் 'அந்த' மாதிரியான நடிகைதான்' - கமல் பட நடிகையை விமர்சித்த கங்கனா - கங்கனா ரணாவத் ட்வீட்

மும்பை: பாலிவுட் நடிகை ஊர்மிளா மடோன்த்கரை ஆபாச படத்தில் நடிக்கும் நடிகை என்று கங்கனா ரணாவத் விமர்சித்துள்ளார்.

Kangana Ranaut
Kangana Ranaut

By

Published : Sep 17, 2020, 2:55 PM IST

பாலிவுட் திரையுலகில் முக்கிய நடிகைகளில் ஒருவர் கங்கனா ரணாவத். இவர் தமிழில் ’தாம்தூம்’ திரைப்படத்தில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்தவர்.

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்தைத் தொடர்ந்து, மீண்டும் பாலிவுட் திரையுலகில் வாரிசுகள் செலுத்தும் ஆதிக்கம் குறித்து பேசத் தொடங்கிய கங்கனா, சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அதைத்தொடர்ந்து மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமப்பு காஷ்மீர் என்று விமர்சித்து சர்ச்சையில் சிக்கினார்.

இந்நிலையில், சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு கங்கனா ரணாவத் அளித்த பேட்டியில், பிரபல பாலிவுட் நடிகை ஊர்மிளா மடோன்த்கரை ஆபாச படத்தில் நடிக்கும் நடிகை என்று குறிப்பிட்டார். இது சமூக வலைதளங்களில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகைகளான ஸ்வாரா பாஸ்கர், பூஜா பட், ஃபரா கான் உள்ளிட்ட பலரும் ஊர்மிளாவுக்கு ஆதரவான கருத்துகளை தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

இது குறித்து கங்கனா ரணாவத் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஊர்மிளா என்னை ஒரு விபச்சாரி என்று அழைத்தபோது ஊமையாக இருந்த பெண்ணியவாதிகள் எங்கே? பெண் இனத்திற்கே உங்களைப் போன்ற போலி பெண்ணியவாதிகள் அவமானம்.

ஒரு மனிதனுக்கு உடலும் உள்ளது, மனமும் உள்ளது. பாலியல் வன்புணர்வு என்பது என்பது உடலுறவு மட்டுமல்ல" என்று பதிவிட்டுள்ளார்.

நடிகை ஊர்மிளா கமல் ஹாசனுடன் இந்தியன் திரைப்படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இதுதான் உண்மையான போதை - கங்கனா ரணாவத்

ABOUT THE AUTHOR

...view details