தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பகிரங்க உண்மை: பாலிவுட் நடிகரால் சமந்தாவிற்கு நேர்ந்த கொடுமை - சமந்தா

சமந்தா - நாக சைதன்யா ஜோடி பிரிந்ததாக அறிவித்துள்ள நிலையில், இதற்கு காரணம் இந்த பாலிவுட் நடிகர்தான் என்று நடிகை கங்கனா ரணாவத் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

Bollywoodstar for Naga Chaitanya-Samantha Akkineni split
Bollywoodstar for Naga Chaitanya-Samantha Akkineni split

By

Published : Oct 4, 2021, 3:28 PM IST

சமந்தா - நாக சைதன்யா இருவரும் 7 ஆண்டுகளாக காதலித்துவந்த நிலையில் 2017ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். நான்கு ஆண்டுகள் திருமண வாழ்க்கையில் கிசுகிசுப்புகளில் சிக்காமல் இருந்தனர்.

இந்த நிலையில், கடந்த சில வாரங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்துவருவதாக தகவல்கள் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. இதுகுறித்து சமந்தா மறுப்பு தெரிவித்தவந்த நிலையில், செப்.2ஆம் தேதி இருவரும் பிரிந்து வாழ்வதாக அறிவித்தனர்.

இதனிடையே கங்கனா ராணாவத் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், "இந்த காலத்தில் விவாகரத்து கலாசாரம் அதிகமாகிவிட்டது. சமீபத்தில் தென்னிந்திய நடிகர் ஒருவர் 7 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகையை பிரிவதாக அறிவித்துள்ளார்.

இந்த நடிகர் சமீபத்தில் பாலிவுட்டின் விவாகரத்து நிபுணர் என அறியப்படும் ஒரு உச்ச நட்சத்திரத்தைச் சந்தித்திருக்கிறார். அதன் பின்னரே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது" எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் 'லால் சிங் சட்டா' படத்தில் ஆமீர்கானுடன் நாக சைதன்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:11 வருட காதல்... ஐந்தாண்டு இல்லறம்: முடிவுக்கு வந்த உறவு

ABOUT THE AUTHOR

...view details