'பரியேறும் பெருமாள்' படத்தை அடுத்து இயக்குநர் மாரி செல்வராஜ் தற்போது தனுஷ் நடிப்பில் 'கர்ணன்' படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்தை 'வி கிரியேஷன்ஸ்' மூலம் தானு தயாரித்துள்ளார்.
தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். மேலும் லால், நட்டி என்கிற நடராஜன், யோகி பாபு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். திருநெல்வேலியை சுற்றியுள்ள ஊர்களில் பிரமாண்டமான செட் போடப்பட்டு நடைபெற்றுவந்த இதன் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுற்றது.
இதனைத் தொடர்ந்து படக்குழுவினர் தற்போது இறுதிகட்ட பணிகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இதில் தனுஷ் கைவிலங்குடன், நெற்றியில் ரத்த கரையுடன் இருந்தார். ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்தப் படம், ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாகும் என போஸ்டரில் அச்சிடப்பட்டிருந்தது. தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 'கண்டா வரச்சொல்லுங்க...' பாடல் நாளை (பிப்ரவரி 18) இரவு 8 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:கர்ணன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு