தமிழ்நாட்டைச் சேர்ந்த பொன்குமரன், இயக்குநர்கள் கே. பாக்யராஜ், கே.எஸ். ரவிக்குமார் ஆகியோரிடம் இணைந்து பணியாற்றியுள்ளார். இதனைத் தொடர்ந்து பொன்குமரன், கன்னடத்தில், 2011ஆம் ஆண்டு வெளியான 'விஷ்ணுவர்தனா' மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
இந்தப் படத்திற்கு அப்போது அவருக்கு siima சிறந்த அறிமுக இயக்குநர் விருது கிடைத்தது. பொன்குமரன், தமிழ், கன்னடத்தில் வெளியான 'சாருலதா' படத்தையும் இயக்கியுள்ளார். மேலும் தமிழில், கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான 'லிங்கா' படத்திற்கு பொன்குமரன் கதை எழுதியுள்ளார்.
இந்நிலையில், நேற்று (செப்.19) நடைபெற்ற தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது விழாவில், பொன்குமரனுக்கு 'யஜமானா' என்ற கன்னட திரைப்படத்தை இயக்கத்திற்காக சிறந்த இயக்குநர் விருது வழங்கப்பட்டது.