2011ஆம் ஆண்டு ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த 'முனி' படத்தின் இரண்டாம் பாகமாக 'காஞ்சனா' வெளியானது. இந்தப் படத்தில் நடிகர் சரத்குமார் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
கதாநாயகனாக ராகவா லாரன்ஸும் கதாநாயகியாக ராய் லட்சுமியும் நடித்திருந்தனர். இவர்களுடன் கோவை சரளா, தேவதர்ஷினி, ஸ்ரீமன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். த்ரில்லர் பேய் படமாக உருவான இந்தப் படத்தில் நகைச்சுவைக் காட்சிகள் இடம் பெற்றதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்புப் பெற்றது.
இந்நிலையில் இந்தப்படத்தின் மூன்றாம் பாகமான 'காஞ்சனா 3' வெளியாகி வசூலைக் குவித்துவருகிறது.
சரத்குமார் நடித்திருந்த திருநங்கை கதாபாத்திரத்தில் நடிகர் அமிதாப்பச்சனை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனை உறுதி செய்யும் வகையில் ராகவா லாரன்ஸ் நடிகர் அக்ஷய்குமாருடன், தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இப்படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தின் மற்ற நடிகர், நடிகைகள், தொழில் நுட்பக் கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.