நடிகரும் நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ் எழுதி இயக்கிய காஞ்சனா படத்தின் இருபாகங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து, தற்போது அவர் எழுதி, இயக்கி தயாரித்திருக்கும் படம் 'காஞ்சனா 3'.
இந்தப் படத்தில் ஓவியா, வேதிகா, நிக்கி தம்போளி, சூரி, கோவை சரளா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதற்கு சர்வேஷ் முராரி, வெற்றி ஆகியோர் ஒளிப்பதிவும், டூ பா டூ இசையும் அமைக்கின்றனர்.