தமிழில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் இயக்குநர் அருண் காமாராஜ் இயக்கத்தில் வெளியான படம் 'கனா'. இப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 'சிவகார்த்திகேயன் புரொடக்ஷ்ன்ஸ்' சார்பில் முதல் முதலாக தயாரித்தார்.
மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார். அவருக்கு அப்பாவாக நடிகர் சத்யராஜ் நடித்திருந்தார்.
தமிழில் மிகப்பெரிய வெற்றிப் பெற்ற இப்படத்தை தெலுங்கில் 'கெளசல்யா கிருஷ்ண மூர்த்தி' என்ற தலைப்பில் ரீமேக் செய்து வருகின்றனர். தெலுங்கிலும் ஐஸ்வர்யா ராஜேஷே முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை சீனிவாச ராவ் இயக்குகிறார்.
இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளனர். இப்படத்திலும் தமிழில் கிரிகெட் பயிற்சியாளராக சிறப்பு வேடத்தில் வந்த சிவகார்த்திகேயன் இதிலும் வருகிறார்.
இப்படத்தை ஆகஸ்ட் 23ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.