தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'ராஜாவுக்கு செக்' வைக்கும் இர்ஃபான் - சுண்டாட்டம் பட நடிகர்

சேரன் நடிப்பில் திரைக்கு வந்துள்ள 'ராஜாவுக்கு செக்' திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் இர்ஃபான் தனது சுவாரஸ்யமான அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்.

kana-kaanum-kaalangal-fame-irfans-special-interview
kana-kaanum-kaalangal-fame-irfans-special-interview

By

Published : Jan 25, 2020, 1:15 PM IST

'கனா காணும் காலங்கள்' தொலைக்காட்சி தொடர் மூலம் அறிமுகமானவர் நடிகர் இர்ஃபான்.

'பட்டாளம்', 'சுண்டாட்டம்', 'பொங்கி எழு மனோகரா' போன்ற படங்களில் ஹீரோவாக நடித்துள்ள இவர் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சேரனின் 'ராஜாவுக்கு செக்' படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.

இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இர்ஃபான், தனது சுவாரஸ்யமான அனுபவங்களை ஈடிவி பாரத் ஊடகத்திற்கு சிறப்பு பேட்டி மூலம் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து பேசிய இர்ஃபான், 'நெகடிவ் ரோலில் நடித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. முதலில் இந்தக் கதையில் நடிக்க மாட்டேன் எனத் தெரிவித்தேன். எனது கதாபாத்திரம் பற்றி படித்தபோது மிகவும் பயந்தேன். இயக்குநர் எனக்கு கொடுத்த நம்பிக்கை காரணமாக தொடர்ந்து நடிக்க ஒப்புக்கொண்டேன். இதுவரை ஏற்றிராத கதாபாத்திரம் என்பதால் என்னை முற்றிலுமாக மாற்றியிருக்கிறேன். இந்தப்படம் ஒரு விழிப்புணர்வாக நிச்சயம் அமையும்' எனக் கூறியுள்ளார்.

இதுபோன்று அவரது கூடுதல் அனுபவங்களையும் நமது ஊடகத்தின் வாயிலாக பகிர்ந்துள்ளார். அதன் முழு தொகுப்பு உங்கள் பார்வைக்கு...

நடிகர் இர்ஃபான் சிறப்பு பேட்டி

ABOUT THE AUTHOR

...view details