சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்துவரும் ‘விக்ரம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாஸ்டர் திரைப்படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசனை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கி வருகிறார். இது கமல்ஹாசனின் 232ஆவது படமாகும். இப்படத்தில் பஹத் பாசில், விஜய் சேதுபதி, நரேன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கிறார். கமலின் ராஜ்கமல் நிறுவனம் இதை தயாரிக்கிறது.
நாளை ‘விக்ரம்’ ஃபர்ஸ்ட் லுக் - லோகேஷ் கனகராஜ் - கமல்
நீண்ட நாட்களாக இப்படத்தை பற்றி எந்த அறிவிப்பும் வராமல் இருந்த நிலையில், கமல், விஜய் சேதுபதி இருவரும் சென்னையில் டெஸ்ட் ஷூட் எடுத்துக்கொண்டதாக தகவல் வெளியானது.
விக்ரம்
நீண்ட நாட்களாக இப்படத்தை பற்றி எந்த அறிவிப்பும் வராமல் இருந்த நிலையில், கமல், விஜய் சேதுபதி இருவரும் சென்னையில் டெஸ்ட் ஷூட் எடுத்துக்கொண்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், நாளை ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார். இதனால் கமல் ரசிகர்கள் செம குஷியில் இருக்கின்றனர்.
இதையும் படிங்க:ட்விட்டர் ட்ரெண்ட்: 100 நாட்களில் கீர்த்தி சுரேஷ் பிறந்தநாள்