தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கனவுகள் மெய்ப்பட பிப்ரவரியில் வருகிறாள் கமலி! - actress ananthi news

சென்னை: கயல் ஆனந்தி நடித்துள்ள ’கமலி ஃப்ரம் நடுக்காவேரி’ திரைப்படம் பிப்ரவரியில் வெளியாகிறது.

ananthi
ஆனந்தி

By

Published : Jan 31, 2021, 3:28 PM IST

தமிழில் கயல் படத்தில் அறிமுகமானவர் ஆனந்தி. அதன் பின்னர் சண்டிவீரன், விசாரணை, பரியேறும் பெருமாள் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.

தற்போது இவர் நடித்துள்ள வெளியாகவிருக்கும் திரைப்படம் ’கமலி ஃப்ரம் நடுக்காவேரி’. கல்லூரி மாணவி தனது கனவை தேடி செல்லும் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை ராஜசேகர் துரைசாமி இயக்கியுள்ளார்.

ரோகித் செராப், பிரதாப் போத்தன், அழகம்பெருமாள், இமான் அண்ணாச்சி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் அடுத்தமாதம் 19ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:“உழைப்பும் நேர்மையும் தான் ட்ரெண்ட் ஆகியிருக்கு” - ஆரி அர்ஜுனன்

ABOUT THE AUTHOR

...view details