சென்னை: கோவா திரைப்படவிழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெறவிருக்கும் நடிகர் ரஜினிகாந்துக்கு, தொலைப்பேசியில் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கோவா சர்வதேச திரைப்பட விழாவின் 50வது ஆண்டு விழா இம்மாதம் 20 முதல் 28ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த விழாவில் சினிமாத்துறையில் சிறப்பான பங்களிப்பை அளித்ததற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு 'ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்ளி' விருது வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு திரையுலகைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் அரசியல் பிரமுகர்கள் என நடிகர் ரஜினிகாந்துக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர்