தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'இசைக்கு வாழ்த்து சொல்வதற்கான விழா' - கமல் புகழாரம்! - இளையராஜா பிறந்தநாள் விழா

சென்னை: இளையராஜாவின் பிறந்தநாள் விழா என்பது இசைக்கு வாழ்த்து சொல்வதற்கான விழா என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

kamalhassan, ilaiyaraja

By

Published : Jun 3, 2019, 9:01 AM IST

இளையராஜாவின் 76ஆவது பிறந்தநாளை ஒட்டி சென்னையில் நேற்று இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது, "நான் தொடர்ந்து இளையராஜாவுடன் மட்டுமே பணியாற்றிவந்தேன். ஒரு மாறுதலுக்காக வேறொருவருடன் இணைந்து பணியாற்றினேன். ஆனால் அந்தப் படத்தில் நான் எதிர்பார்த்த இசை கிடைக்கவில்லை.

பின்னர் நான் மீண்டும் இளையராஜாவிடமே சென்று அப்படத்திற்கு இசையமைக்கச் சொன்னேன். அப்போது அந்தப் படத்திற்கு சம்பளமே வாங்காமல் இசையும் பாடலும் அமைத்துக் கொடுத்தார். அந்தப் படம்தான் ஹேராம் என்றார்.

இதனைத்தொடர்ந்து இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்வதற்காக மட்டும் இந்த விழா இல்லை, இசைக்கு வாழ்த்து சொல்வதற்கான விழா" என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details