தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'83' உலகக்கோப்பையை தமிழில் வழங்கும் கமல்! - கிரிக்கெட் கப்

ரன்வீர், தீபிகா, ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள ’83’ படத்தின் தமிழ் வெளியீட்டு உரிமையை கமல ஹாசனின் ராஜ் கமல் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.

83
83

By

Published : Jan 23, 2020, 6:59 PM IST

1983ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பையை கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக வென்று சாதனை படைத்தது.

அந்த உலகக்கோப்பையில் கபில்தேவ் அண்ட் கோ மேற்கொண்ட பயணத்தை அடிப்படையாக வைத்து "83" என்ற பெயரில் படம் உருவாகிவருகிறது. இந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் தயாராகியுள்ள இந்த படம் ஏப்ரல் 20 அன்று வெளியாகிறது.

படத்தில் கபில்தேவாக ரன்வீர் சிங்கும், அவரது மனைவி ரோமி தேவாக தீபிகா படுகோனேவும் நடிக்கிறார்கள். கோலிவுட் நடிகர் ஜீவா, தமிழக வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் வேடத்தில் நடிக்கிறார். மேலும் பார்வதி நாயர், போமன் இரானி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

தற்போது தமிழில் வெளியாகும் ’83’ படத்தை வெளியிடும் உரிமையை கமலின் ராஜ் கமல் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. அதேபோல் தெலுங்கு வெளியிட்டு உரிமையை நாகர்ஜூனா வாங்கியுள்ளார்.

இதையும் வாசிங்க: '83' படம் உலகக் கோப்பை நினைவுகளை மலர வைக்கும் - நடிகர் ஜீவா

ABOUT THE AUTHOR

...view details