பயமும் பரபரப்பும் அடங்கிய இந்த ஊரடங்கு நேரத்தில் மக்களிடம் நம்பிக்கையை பரவச் செய்யும் வகையில் நடிகர் கமல்ஹாசன் எழுதி இயக்கியிருக்கும் பாடல் அறிவும் அன்பும்.
அனிருத், யுவன் ஷங்கர் ராஜா, பாம்பே ஜெயஸ்ரீ, தேவிஸ்ரீபிரசாத், சங்கர் மகாதேவன், ஸ்ருதி ஹாசன், சித்தார்த், லிடியன், ஆண்ட்ரியா, சித் ஸ்ரீராம், முகின் என திரையுலகப் பட்டாளமே இந்த கரோனா விழிப்புணர்வு பாடலை பாடியுள்ளனர்.
ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்பாடல் திங்க் மியூசிக் (THINK MUSIC) நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. இப்பாடல் காட்சியில் வரும் ஒவ்வொரு நடிகரும், பாடகரும் பாடலை தங்களது வீட்டில் இருந்தபடியே காட்சிப்படுத்தியுள்ளனர். மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கும் இப்பாடல் வெளியிடப்பட்டதில் இருந்தே ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது. இப்பாடலை நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க... கரோனாவுக்காக குரல் கொடுத்த எஸ். பி. பி, கவிதை தொடுத்த வைரமுத்து