அண்ணல் அம்பேத்கர் தலைமையிலான குழு உருவாக்கிய இந்திய அரசிலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்து இன்றுடன் 72 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. பல அரசியல் ஆளுமைகள் இது குறித்து தங்கள் கருத்துகளைப் பதிவு செய்துவருகின்றனர்.
நடிகர் கமல்ஹாசனும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் குறித்து தனது கருத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், "அம்பேத்கர் தலைமையில், அறிஞர்கள் உருவாக்கிய இந்திய அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்து 72ஆவது ஆண்டு இது. பல நாடுகளின் கோட்பாடுகளைத் தனதாக்கிய இந்தியா, பொதுவுடைமை, மதச்சார்பின்மை, நேர்மை ஆகிய தன் அடிப்படைக் கொள்கைகளில் இனி பொலிய வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க.. அரசியலமைப்பு தினம்! அம்பேத்கருக்கு மரியாதை செலுத்திய மம்தா பானர்ஜி