சென்னை: இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தரின் 91ஆவது பிறந்தநாளான இன்று (ஜூலை 9) அவர் குறித்து கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.
கமல்ஹாசனின் திரைப்பயணத்தில் முக்கிய பங்காற்றியவர் கே. பாலச்சந்தர். அபூர்வ ராகங்கள், நினைத்தாலே இனிக்கும், உன்னால் முடியும் தம்பி, புன்னகை மன்னன் என இவர்கள் கூட்டணியில் ஹிட்டடித்த படங்கள் ஏராளம். பாலச்சந்தர் கடைசியாக பணியாற்றியது கமலின் ‘உத்தமவில்லன்’ படத்தில்தான். இந்நிலையில், பாலச்சந்தர் பிறந்தநாளான இன்று அவர் குறித்து கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.