ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலரும் நடித்து வரும் 'இந்தியன் 2' படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அவ்வப்போது படப்பிடிப்பு பணிகளில் இருந்து ஓய்வுபெறும் கமல், மீண்டும் இந்தியன் 2 படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில் இதன் படப்பிடிப்பு 5 நாட்கள் நடைபெறவுள்ளன. இதில் கலந்து கொள்ளும் கமல்ஹாசன், வரும் நவம்பர் 17ஆம் தேதி நடைபெறவுள்ள தனது பாராட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக சென்னை திரும்புவார் எனக் கூறப்படுகிறது.