மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா உள்ளிட்டோர் நடித்து மெகா ஹிட்டான திரைப்படம் த்ரிஷ்யம். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட ஏராளமான மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.
தமிழில் கமல்ஹாசன், கௌதமி நடித்து பாபநாசம் என்ற பெயரில் வெளியான இந்த படம், ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
கமலுடன் ஜோடி சேரும் நதியா? - kamalhassan
பாபநாசம் இரண்டாம் பாகத்தில் கமலுக்கு ஜோடியாக நடிகை நதியா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கமலுக்கு ஜோடியாகும் நதியா?
இதன் தமிழ் ரீமேக் வேலைகளும் நடைபெற்று வருகிறது. இதிலும் கமல்ஹாசனே நடிக்க உள்ளார். பாபநாசம் திரைப்படத்தில் கமல்ஹாசன் மனைவியாக நடித்த கௌதமி இந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.எனவே அவருக்கு பதிலாக "பூவே பூச்சூடவா" நதியாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் நடிக்க ஒப்புக்கொண்டால் கமலுடன் நதியா இணைந்து நடிக்கும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : யுவன் இசையில் மீண்டும் பாடல் பாடிய சிம்பு!
Last Updated : Jun 28, 2021, 5:27 PM IST