வீட்டின் உள் இருந்தால் மட்டும் போதாது அடுத்தக் கட்டத்தை நோக்கி வேகமாக முன்னேற வேண்டிய நேரம் இது என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
அடுத்தக் கட்டத்தை நோக்கி முன்னேறும் நேரம் இது - கமல்ஹாசன் - கமல்ஹாசனின் ட்வீட்
வீட்டின் உள் இருத்தல் என்பது முதல்படி தான், ஆனால் அது மட்டுமே தீர்வாகாது என உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை அதிகாரி அறிவுறுத்தியதை கமல்ஹாசன் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடு முழுவதும் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து மாநில, மாவட்ட எல்லைகளும் அடைக்கப்பட்டு, பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே இருக்கும்படி அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனால் பல்வேறு பணியாளர்களும் தினக்கூலி தொழிலாளர்களும் பாதிப்படைந்துள்ளனர். இதற்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாநில அரசும் மத்திய அரசும் அறிவித்துள்ளன.
இதனிடையே, நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், வீட்டின் உள் இருத்தல் என்பது முதல்படி தான், ஆனால் அது மட்டுமே தீர்வாகாது என உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை அதிகாரி அறிவுறுத்துகிறார். அடுத்தக் கட்டத்தை நோக்கி வேகமாக முன்னேற வேண்டிய நேரம் இது என்று பதிவிட்டுள்ளார்.