தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மீண்டும் பள்ளிக்கு திரும்பியது போல் இருக்கிறது - விக்ரம் படப்பிடிப்பில் கமல்! - vikram trailer

‘விக்ரம்’ படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. இதுகுறித்து கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

kamal hassan tweet about vikram movie
kamal hassan tweet about vikram movie

By

Published : Jul 17, 2021, 5:13 PM IST

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் படம் ‘விக்ரம்’. 1986ஆம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘விக்ரம்’. இந்தப் படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி கண்டது. இது ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்த இரண்டாவது படமாகும். தற்போது அதே பெயரை லோகேஷ் கனகராஜ் பயன்படுத்தியுள்ளார்.

kamal hassan tweet about vikram movie

சமீபத்தில் இதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது படத்துக்கு பூஜை போடும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த கமல், மீண்டும் பள்ளிக்கு திரும்பியது போல் உள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் இந்த அளவு படப்பிடிப்பை விட்டு நான் விலகி இருந்ததில்லை. பல இயக்குநர்கள் ஒரு ஆண்டுக்கு மேல் செயல்படாமல் இருக்கின்றனர்.

என் தொழில் சார்ந்த தோழர்கள் அனைவரையும் மீண்டும் ராஜ்கமல் நிறுவனத்தோடு இணைந்து பணிக்கு திரும்ப அழைக்கிறேன். அதிலும் குறிப்பாக லோகேஷ் கனகராஜ் & டீம், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:முதல்ல நானே விஜய் ரசிகன்தான் - ஜோஜு ஜார்ஜ்!

ABOUT THE AUTHOR

...view details