கமல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் ‘விக்ரம்’. தீவிர கமல் ரசிகரான லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்குவதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. சமீபத்தில்தான் இதன் படப்பிடிப்பு பணிகள் மீண்டும் தொடங்கியது.
இன்று இதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது. ஃபர்ஸ்ட் லுக்கை பதிவிட்ட கமல், வீரமே வாகையைச் சூடும். மீண்டும் துணிகிறேன், நம் இளம் திறமைகளை உம் முன் சமர்ப்பிக்க. நேற்றே போல நாளையும் நமதாக வாழ்த்தட்டும் தாயகம். விக்ரம்… விக்ரம்… என குறிப்பிட்டுள்ளார்.