நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93ஆவது பிறந்தநாள் இன்று (அக். 1) கொண்டாடப்பட்டுவருகிறது. இதனையொட்டி அவரது நினைவுகள் குறித்து திரையுலகினர் பலர் தங்களது சமூக வலைதளங்களில் வெளியிட்டுவருகின்றனர்.
அந்தவகையில், கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் சிவாஜி குறித்த நினைவுகளைப் பகிர்ந்துள்ளார். அதில், "நடிப்புக் கலையின் கொடுமுடி கண்டவர். திரை ரசனையின் பொற்காலம் ஆனவர்.
கமல் ஹாசன் வெளியிட்ட பதிவு மனங்களில் இன்னும் காலம் ஆகாதவர். என்றென்றைக்குமான கலைஞரான சிவாஜி கணேசன். பிறந்த நாளில் வணங்குகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
கமல் ஹாசனும், சிவாஜி கணேசனும் இணைந்து, பார்த்தால் பசிதீரும், நாம் பிறந்த மண், சத்யம், தேவர் மகன் ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:தலைவன் வந்தாலே தியேட்டர் தெறிக்கும்