பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் 1996ஆம் ஆண்டு வெளியான படம் இந்தியன். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிவருகிறது.
அறுவை சிகிச்சை முடிந்து மீண்டும் இந்தியன் 2 படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் கமல்! - இந்தியன் 2
காலில் அறுவை சிகிச்சை முடிந்த நிலையில், மீண்டும் கமல்ஹாசன் இந்தியன் 2 படப்பிடிப்பில் அடுத்த மாதம் கலந்துகொள்ளவுள்ளார்.
இதில் ரகுல் பிரீத் சிங், காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் நடித்துவருகின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் ராஜஸ்தான், போபால் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. இதற்கிடையில் கமல்ஹாசனுக்கு சமீபத்தில் காலில் அறுவை சிகிச்சை நடைபெற்ற நிலையில், 'இந்தியன் 2' ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது மீண்டும் 'இந்தியன் 2' படத்தின் ஷூட்டிங் சென்னையில் உள்ள இவிபி ஃப்லிம் சிட்டியில் நடைபெறவுள்ளது. அடுத்த மாதம் 8ஆம் தேதி தொடங்கவுள்ள இந்தியன் 2 ஷூட்டிங் தொடர்ந்து 35 நாள்கள் நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இதில் பிரியா பவானி ஷங்கர் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: #Bigil100days: ட்விட்டரை தெறிக்கவிட்ட விஜய் ரசிகர்கள்