மறைந்த பிரபல இயக்குநர் கே.பாலசந்தருக்கு இன்று 90ஆவது பிறந்த நாள். இதையொட்டி திரையுலகப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவரின் நினைவுகள் குறித்து பதிவு வெளியிட்டு வருகின்றனர்.
'அவர் வீட்டில் மகன் போன்றவன் நான்' - பாலசந்தர் குறித்து கமல்ஹாசன் உருக்கம்! - Latest cinema news
இயக்குநர் கே. பாலசந்தர் குறித்து நடிகர் கமல்ஹாசன் காணொலிப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
!['அவர் வீட்டில் மகன் போன்றவன் நான்' - பாலசந்தர் குறித்து கமல்ஹாசன் உருக்கம்! கமல்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-09:25:48:1592754948-8-2106newsroom-1592740387-307.jpg)
அந்தவகையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் காணொலிப் பதிவு ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதில், "கே.பி. அவர்களுக்கு... நாங்கள் அப்படித்தான் அழைப்போம். இயக்குநர் சிகரம் பாலசந்தர் அவர்கள் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுவார். முதன்முதலில் ஜெமினி தான், என்னை அவரிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். அவர் பம்பரம்போல் சுற்றிக் கொண்டிருந்த நேரத்தில், சற்று நின்று என்னைக் கவனித்தார்.
என்னைப் போன்ற ஒரு நடிகரின் வாழ்க்கையில், அவர் இத்தனை வேதங்களை ஏற்பார் என்று யாருமே நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். என்னுடைய தந்தை போன்றவர் அவர். அவர் வீட்டில் ஒரு மகன் போன்றவன் நான். தற்போது குழந்தை போன்று, அவருடைய சுறுசுறுப்பை எண்ணிப் பார்க்கின்றேன்" என்று பேசியுள்ளார்.