உலகம் முழுவதும் பரவியுள்ள கரோனா நோய் பரவாமல் தடுக்க நோய்த்தொற்று உள்ளவர்களும், வெளிநாடுகளுக்குச் சென்று வந்தவர்களும் தங்களை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு லண்டன் சென்ற ஸ்ருதிஹாசன் தன்னைத்தானே தனிமைபடுத்திக்கொண்டுள்ளார். அதேபோல் அவரது தாயார் சரிகா மும்பையில் உள்ள வீட்டிலும், தந்தை கமல் ஹாசன், அக்ஷரா ஹாசன் சென்னையில் தனித்தனி வீட்டிலும் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர். இந்தத் தகவலை ஸ்ருதிஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.