சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் அமெரிக்கா சென்றிருந்தார். பின்னர் சென்னை திரும்பிய அவர், தனக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாகவும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
அதன்படி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே கமல்ஹாசன் சுவாசப் பாதை தொற்று, காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தனியார் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் முன்னர் அறிக்கை வெளியிடப்பட்டது.