கமல்ஹாசன் இயக்கத்தில் வெளியான கல்ட் கிளாசிக் திரைப்படம் ‘ஹே ராம்’. இதனை அவரே எழுதி, தயாரித்து நடித்திருந்தார். இதில் ராணி முகர்ஜி, வசுந்தரா தாஸ், அடுல் குல்கர்னி, ஓம் பூரி, கிரிஷ் கர்னாட், ஹேமா மாலினி, ஷாருக்கான் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இந்தப் படம் வெளியாகி இன்றோடு 20 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையொட்டி கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் அவர், ஹே ராம் படத்தின் 20ஆம் ஆண்டு. சரியான நேரத்தில் நாம் இந்தப் படத்தை எடுத்ததை எண்ணி மகிழ்ச்சியடைகிறோம். இந்தப் படம் ஏற்படுத்திய பீதியும், விடுத்த எச்சரிக்கையும் உண்மையாகிக் கொண்டிருப்பது சோகம். நம் நாட்டின் நல்லிணத்தை மனதில் கொண்டு நாம் இந்த சவால்களை வென்றெடுப்போம். நாளை நமதே என குறிப்பிட்டுள்ளார்.