தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

உடைச்ச டீவிய ஓட்ட வச்சு பிக் பாஸ் பாக்கலாம் போ: கமலை கலாய்த்த பிரபல தயாரிப்பாளர்!.. - மக்கள் நீதி மய்யம்

மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், பிரபல தயாரிப்பாளர் ஒருவர் ம.நீ.ம தலைவர் கமல்ஹாசனை கலாய்த்திருக்கிறார்.

cv kumar

By

Published : May 24, 2019, 5:41 PM IST

மக்களவை தேர்தல், சட்டப்பேரவை இடைத்தேர்தலில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி முதன்முறையாக போட்டியிட்டது. நேற்று தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி, மூன்று அல்லது நான்காவது இடத்தை பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் பிரபல தயாரிப்பாளரும், இயக்குநருமான சி.வி.குமார், ம.நீ.ம தலைவர் கமல்ஹாசனை கலாய்த்திருக்கிறார்.

சி.வி.குமார் ட்விட்டர் பக்கம்

இதுகுறித்து சி.வி.குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், "போ... போ... எல்லாம் முடிஞ்சருச்சு போ ... உடைச்ச டீவிய ஒட்ட வச்சு பிக் பாஸ் பாக்கலாம் போ..." என்று பதிவிட்டுள்ளார்.

அரசியல்வாதிகளின் பெயர்களை கூறுகையில் , கோபமாக டிவியை உடைப்பது போன்ற வீடியோவை தேர்தல் பரப்புரைக்காக கமல் வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவை கலாய்ப்பது போல் இந்த பதிவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details