தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

விக்ரம் ரிலீஸ் தேதி அறிவிப்பு - மிரட்டும் மேக்கிங் கிளிம்ப்ஸ் - விக்ரம் மேக்கிங் கிளிம்ப்ஸ்

கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள 'விக்ரம்' திரைப்படம் வரும் ஜூன் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

kamal haasan vikram movie
kamal haasan vikram movie

By

Published : Mar 14, 2022, 8:22 AM IST

Updated : Mar 14, 2022, 9:44 AM IST

கமல் ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள திரைப்படம் 'விக்ரம்'. கைதி, மாஸ்டர் திரைப்படங்களை தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகவுள்ள இத்திரைப்படத்திற்கு மக்கள் ரசிகர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

லோகேஷ் இன்று (மார்ச் 14) தனது 36ஆவது பிறந்தநாளை கொண்டாடிவரும் நிலையில், அவர் பிறந்தநாளை முன்னிட்டு 'விக்ரம்' திரைப்படத்தின் கிளிம்ப்ஸையும், வெளியீடு தேதியையும் நடிகர் கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

அவரது ட்விட்டில்,"நானும் உங்கள் முன் சமர்ப்பிக்க ஆவலாய் காத்திருக்கும் 'விக்ரம்' உலகின் சிறந்த திரை அரங்குகளில் ஜூன் 3ஆம் தேதி முதல்" எனக்குறிப்பிட்டு படத்தின் மேக்கிங் கிளிம்ப்ஸையும் வெளியிட்டுள்ளார். முன்னதாக, லோகேஷ் கனகராஜின் பிறந்தநாளுக்கு கமல் ஹாசன் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இதற்கு நன்றி தெரிவித்த லோகேஷ், "இதை விட சிறந்த பிறவி பலன் வேறொன்றும் இல்லை. நன்றி ஆண்டவரே

" என பதிலளித்துள்ளார்.

இதையும் படிங்க: அஜித், சூர்யா படங்களுக்கு அதிகரிக்கும் திரையரங்குகள்!

Last Updated : Mar 14, 2022, 9:44 AM IST

ABOUT THE AUTHOR

...view details