தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் கமல் - அறுவை சிகிச்சை

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு அவரது காலில் பொருத்தப்பட்டிருந்த கம்பி அகற்றப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

Kamal Haasan
கமல்ஹாசன்

By

Published : Nov 28, 2019, 8:31 AM IST

கடந்த 2016ஆம் ஆண்டு எதிர்பாராமல் நடந்த விபத்தின் காரணமாக கமல்ஹாசனின் வலது காலில் முறிவு ஏற்பட்டது. அப்போது அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவரது காலில் டைட்டானியம் கம்பி பொருத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தொடர் வேளைப்பளு காரணமாக அக்கம்பியை அகற்ற முடியாமல் கமல் இருந்துவந்தார். இதனிடையே மருத்துவர்களின் ஆலோசனைக்கேற்ப கடந்த 22ஆம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அக்கம்பியை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சை நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சை நலமாக முடிந்து மருத்துவர்களின் ஆலோசனையின்படி நேற்று மாலை மருத்துமனையில் இருந்து கமல்ஹாசன் வீடு திரும்பினார்.

இதையும் படிங்க...

நடிகர் பாலாசிங் உடலுக்கு சினிமா பிரபலங்கள் கண்ணீர் அஞ்சலி!

ABOUT THE AUTHOR

...view details