நடிகர், பாடகர், இசையமைப்பாளர் என பன்முகத் திறன் கொண்ட எஸ்.பி. பாலசுப்ரமணியம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் குணமடைய வேண்டும் என திரைத்துறை பிரபலங்கள் வேண்டி வருகின்றனர்.
உங்கள் குரல் இன்னும் ஒலித்திட வேண்டும் - எஸ்பிபி குறித்து கமல் ட்வீட் - spb
சென்னை: நடிகர் கமல்ஹாசன் தனது நெருங்கிய தோழரான எஸ்.பி. பாலசுப்ரமணியம் விரைவில் குணமடைய வேண்டும் என ட்வீட் செய்துள்ளார்.
Kamal haasan on SPB
இந்நிலையில், எஸ்பிபி குறித்து நடிகர் கமல்ஹாசன் ஒரு ட்வீட் செய்துள்ளார். அதில், அன்பிற்கினிய அன்னைய்யா, உங்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். எனது குரலாக நீங்களும், உமது முகமாக நானும் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறோம். உங்கள் குரல் இன்னும் ஒலித்திட வேண்டும். மீண்டும் வாருங்கள். தொரகா ரண்டி அன்னைய்யா என குறிப்பிட்டுள்ளார்.
தெலுங்கு படங்களில் தொடர்ந்து கமல்ஹாசனுக்கு எஸ்பிபி குரல் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.