தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பரமக்குடி ப்ராஜெக்ட் - ரூ. 1 கோடி நன்கொடை..! ஒடிசா விசிட்டடித்த கமல்ஹாசன்..! - Kamal haasan donated RS. 1 crore for skill developement centre in paramakudi

சென்னை: கமல்ஹாசன் தனது சொந்த ஊரான பரமக்குடியில் திறன் வளர்ப்பு மையம் அமைப்பதற்கு ரூ. 1 கோடி நன்கொடை அளித்திருக்கிறார்.

Kamal haasan donated RS. 1 crore for skill developement centre in paramakudi

By

Published : Nov 19, 2019, 5:27 PM IST

கமல்ஹாசன் திரையுலகில் தடம்பதித்து 60 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அவர் பிறந்தநாள் விழா மூன்று நாட்கள் பிரமாண்டமாகக் கொண்டாடப்பட்டது. ‘உங்கள் நான்’ என்ற தலைப்பில் நடைபெற்ற இவ்விழாவில், ரஜினி, இளையராஜா, மணிரத்னம், ஷங்கர் உள்ளிட்ட திரைத்துறை பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இந்த மூன்று நாள் கொண்டாட்டத்தில், கமல்ஹாசன் தனது தந்தை ஸ்ரீநிவாசனுக்கு சொந்த ஊரான பரமக்குடியில் சிலை திறந்தார். அதேபோல் குருநாதர் பாலசந்தருக்கு தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் அலுவலத்தில் சிலை திறந்துவைத்து, ஹே ராம் படத்தை திரையிட்டார்.

தனது தந்தைக்கு சிலை திறந்து வைத்து பரமக்குடியில் பேசிய கமல்ஹாசன், அப்பகுதியில் திறன் வளர்பு மையம் (Skill to Scale Tamilnadu) அமைக்க திட்டமிட்டிருப்பதாக தெரிவித்திருந்தார். ’உங்கள் நான்’ விழாவின் மூலம் வசூல் செய்யப்பட்ட பணத்தில், ரூ. 1 கோடியை அதற்காக நன்கொடை அளித்திருக்கிறார். அப்போது இளையராஜா, ரஜினி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Kamal haasan donated RS. 1 crore for skill developement centre in paramakudi

பரமக்குடியில் திறன் வளர்ப்பு மையம் அமைக்கும் பணிகள் வெகு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒடிசாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் பெறச் சென்ற கமல்ஹாசன், இதற்காக அங்குள்ள திறன் வளர்ப்பு மையங்களை பார்வையிட்டுள்ளார். அதேபோல் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை சந்தித்து கமல் அறிவுரை பெற்றிருக்கிறார்.

இதையும் படிங்க: நடிகர் கமல்ஹாசனுக்கு ஒடிசா முதலமைச்சர் அறிவுரை.!

ABOUT THE AUTHOR

...view details