தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'ஜெய் பீம்' பார்த்தேன் கண்கள் குளமானது - கமல்ஹாசன் - சூர்யாவின் ஜெய் பீம்

சூர்யா நடிப்பில் வெளியான 'ஜெய் பீம்' படத்தை அப்படக்குழுவினருடன் பார்த்த கமல்ஹாசன் அவர்களை மனதார பாராட்டியுள்ளார்.

kamal
kamal

By

Published : Nov 2, 2021, 1:19 PM IST

த.செ.ஞானவேல் இயக்கத்தில், 2டி என்டர்டைன்மென்ட் தயாரிப்பில், சூர்யா நடித்துள்ள படம் 'ஜெய் பீம்'. இதில் ரெஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு இன்று நவம்பர் 2ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் 'ஜெய் பீம்' வெளியாகியுள்ளது. இப்படத்தைப் பார்த்த முதலமைச்சர் ஸ்டாலின், இயக்குநர் பா. இரஞ்சித் உள்ளிட்ட பலர் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

இந்நிலையில், 'ஜெய் பீம்' படக்குழுவினருடன் படம் பார்த்த கமல்ஹாசன் அவர்களை மனதார பாராட்டியுள்ளார். ஜெய் பீம் குறித்து தனது ட்விட்டரில் கமல்ஹாசன், " 'ஜெய் பீம்' பார்த்தேன். கண்கள் குளமானது. பழங்குடியினரின் இன்னல்களை அழுத்தமாக வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குநர் த.செ.ஞானவேல்.

பொதுச் சமூகத்தின் மனசாட்சிக்குக் குரலற்றவர்களின் குமுறல்களைக் கொண்டு சேர்த்த சூர்யா, ஜோதிகா மற்றும் படக்குழுவினருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 'விக்ரம்' படப்பிடிப்பில் பிறந்த நாள் கொண்டாடிய கமல்ஹாசன்!

ABOUT THE AUTHOR

...view details