சென்னை: வாரஇதழ் பத்திரிகையாளர் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்று ஊடகம். இது பழைய செய்தி. இன்றைய தரம் தாழ்ந்த அரசியலில் நிர்வகிக்கும் ஜனநாயகத்தில் ஊடகம் நான்கில் ஒன்றல்ல. இது மையத் தூண். மக்களிடம் ஊடகங்கள் ஏற்படுத்திய விழிப்புணர்வால், இந்திய ஜனநாயகத்தின் மாண்பு பல முறை காப்பாற்றப்பட்டுள்ளது.
வார பத்திரிகையில் செய்தியாளர் தாக்கப்பட்டது ஊடக சுதந்திரத்துக்கு விடப்படும் சவால். இச்சம்பவத்தை மக்கள் நீதி மையம் வன்மையாகக் கண்டிக்கிறது.
கருத்தியல் ரீதியில் பதிலளிக்க முடியாமல் திணறும் ஆளும் அரசின் இயலாமையை மறைத்திட, வன்முறையைக் கையில் எடுப்பது மிகுந்த ஆபத்தான போக்காகும்.