தமிழக அரசியல் களம் உங்களை காண காத்திருக்கிறது - விஜயகாந்துக்கு வாழ்த்து தெரிவித்த கமல்ஹாசன் - விஜயகாந்த் பிறந்தநாள்
சென்னை: நடிகர் விஜயகாந்த் பிறந்த நாளுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகரும், தேமுதிக பொதுச்செயலாளருமான விஜயகாந்த் இன்று (ஆகஸ்ட் 25) தனது 68ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். விஜயகாந்த் தனது குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழக அரசியல் களம் மீண்டும் முழு வீச்சில் உங்களைக் காணக் காத்திருக்கிறது; மக்கள் பணியைத் தொடர வாழ்த்துகள் நண்பர் விஜயகாந்த் அவர்களே" என பதிவிட்டுள்ளார்.