தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

காத்திருக்கும் கல்யாணிக்கு கமெண்ட் அடித்த இயக்குநர்! - ஆக்ஷன் கிங் அர்ஜூன்

'ஹீரோ' திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில், இதன் டீஸர் நாளை வெளியாக இருக்கிறது. இதற்காக அலாரம் வைத்து காத்திருப்பதாக படத்தின் ஹீரோயின் கல்யாணி பிரியதர்ஷன் ட்வீட் ஒன்றை பதிவிட்டிருக்கிறார்.

hero teaser

By

Published : Oct 23, 2019, 4:59 PM IST

'நம்ம வீட்டுப் பிள்ளை' திரைப்படத்துக்குக் கிடைத்த வரவேற்பால் உற்சாகமாக இருக்கும் சிவகார்த்திகேயனின் 'ஹீரோ' டீசர் வெளியாகவுள்ளது. 'இரும்புத்திரை' இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கிவரும் இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். மேலும் இந்தப் படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன், அபய் தியோல் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

சமீபத்தில் 'ஹீரோ'வின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி ட்ரெண்டான நிலையில், இதன் டீசரும் நாளை (October 24) காலை 11 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் ஹீரோயின் கல்யாணி, அலாரம் வைத்து விட்டதாக ட்வீட் ஒன்றைப் பதிவிட்டார். அதற்கு இயக்குநர் பி.எஸ்.மித்ரன், 'இத நானே எதிர்பார்க்கலயே' என்று கமென்ட் செய்திருந்தார்.

அதற்கு பதிலளித்த கல்யாணி, 'என்னதான் டீசர் பார்த்துட்டாலும் அந்த லிங்க்கை கிளிக் பண்ணி எல்லாரோடையும் பார்க்குறதுல ஒரு தனி எக்ஸைட்மென்ட்' என்று பதிலளித்துள்ளார்.

கமென்ட் அடித்த இயக்குநர் பி.எஸ்.மித்ரன்

இதையும் படிங்க: 'Kim Ji-young, Born 1982': பெண்ணியம் பேசும் படத்தால் தென் கொரியாவில் பதற்றம்!

ABOUT THE AUTHOR

...view details